**************************************************************************
பிரண்டைத் துவையல்
தேவையான பொருட்கள்
பொடியாக நறுக்கிய இளம் பிரண்டை - கால் கப்
தேங்காய் துருவல் - 1 தேக்கரண்டி
எள் - 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு, மிளகு - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 4
புளி - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை
எண்ணெய் விடாமல் எள்ளை வறுக்கவேண்டும். பின்னர் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாயை வறுக்கவும். பிரண்டையை தனியாக எண்ணெய்விட்டு வதக்கவும். பின்னர் வதக்கிய அனைத்தையும் அரைக்கவும். பிரண்டை துவையல் தயார். பிரண்டை வாயுவை நீக்கும்.
********************************************************************************