அவல் உப்புமா

தேவையான பொருட்கள்
நல்ல கெட்டியான அவல்  - 200 கிராம்

தோல் சீவி பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு   - 1கப்
 மஞ்சள் பொடி  - 1 டீஸ்பூன்
 வறுத்த வேர்க்கடலை   - 50 கிராம்
பொடியாக நறுக்கிய இஞ்சி  - சிறிதளவு
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய்  - 3

 பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை  - 1 கட்டு கடுகு,உளுத்தம்பருப்பு, பெருங்காயம், எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.
செய்முறை
கெட்டி அவலை சுத்தம் செய்து கல் போக நீரில் களைந்து ஈரம் போக பிழிந்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து பெருங்காயம் போட்டு, நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய், உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும். அத்துடன் வாணலியில் அவலைக் கொட்டி மஞ்சள்தூள், உப்பு, வேர்க்கடலை சேர்த்து கிளறவும். சுமார் 5 நிமிடங்கள் சிம்மில் போட்டு மூடிவைக்கவும். இப்போது மல்லித் தழைப்போட்டு கிளற, சுவையான அவல் உப்புமா தயார்.
(சமைக்கத் தெரியாத புதுமணப் பெண்கள் சொதப்ப நினைத்தால் கூட சொதப்ப முடியாத டிஷ் இந்த அவல் உப்புமா.)