கோயில்கள் நிறைந்த தமிழ்நாடு
3800 ஆண்டுகள் பழமையான புராதன பெருமை வாய்ந்த நாகரிகம் கொண்ட பகுதிகள் தமிழ்நாட்டில் உள்ளது. உலக பாரம்பரிய சின்னங்களாக யுனெஸ்கோ அமைப்பால் அறிவிக்கப்பட்ட தஞ்சை பெரியகோயில், மகாபலிபுரம் போன்ற இடங்கள் தமிழகத்தில் அதிகம் உள்ளன. மதுரை மீனாட்சியம்மன் கோயில், ஸ்ரீரங்கநாதசாமி கோயில்,
பிரகதீஸ்வரர் கோயில் உள்ளிட்டவை இவற்றில் முக்கியமான கோயில்களாகும். அதேசமயத்தில் ஆசியாவின் மிகப்பெரிய மருத்துவமனைகளில் சில மருத்துவமனைகள் தமிழ்நாட்டில் இருப்பதால் இங்கு மருத்துவ சுற்றுலாவும் சிறப்பு வாய்ந்ததாக திகழ்கிறது. இந்தியாவின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரி மாவட்டம் சூரிய உதயம் மற்றும் மறைவதைக்காண ஏற்ற பகுதியாகும். இங்கு உள்ள தொட்டிப்பாலம் ஆசியாவிலேயே மிக உயரத்தில் அமைக்கப்பட்ட கால்வாய் ஆகும். ஆசிய பெரிய சிலையான திருவள்ளுவர் சிலை, முழுவதும் மரத்தாலேயே உருவாக்கப்பட்ட பத்மநாதபுரம் அரண்மனை, மலைவாசஸ்தலங்களான கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு, வால்பாறை, ஏலகிரி ஆகியவை சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்து வருகின்றன. குற்றாலம், ஒகேனக்கல் போன்ற புகழ்பெற்ற அருவிகள், பறவைகள் சரணாலயங்கள் இங்கு உள்ளன. உலகிலேயே இரண்டாவது பெரிய சதுப்புநிலக்காடுகள் தமிழகத்தின் பிச்சாவரம் பகுதியில் உள்ளன.