சமையல் குறிப்பு


மசாலா பஜ்ஜி
 
தேவையான பொருட்கள்
வாழைக்காய், வெங்காயம், கத்தரிக்காய், செளசெள, காலிபிளவர் என பஜ்ஜிக்கு ஏற்ற காய்கறிகள் - தேவையான அளவு
சாட் மசாலா - 2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு


மேல் மாவுக்கு
கடலைமாவு - ஒரு கப்
அரிசி மாவு - 2 டீஸ்பூன்
கார்ன் ஃபளார் - ஒரு டேபிள் ஸ்பூன்
மிளகாய்தூள், சீரகம் - தலா அரை டீஸ்பூன்
பெருங்காயத்தூள், சமையல் சோடா - தலா ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
செய்முறை
மாவுக்கு கொடுத்துள்ள பொருட்கள் எல்லாவற்றையும் சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும். காய்கறிகளை தோல் நீக்கி விரும்பிய வடிவத்தில் நறுக்கிக்கொள்ளவும். எண்ணெயை காயவைத்து நறுக்கிய காயை மாவில் இருபுறமும் முக்கி எடுத்து காயும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இதேபோல் எல்லா பஜ்ஜிகளையும் பொரித்தெடுக்கவும். சாட் மசாலாவை தூவி நன்கு கலந்து பரிமாறவும்.