மகளிர்தின செய்தி


பெண்கள் எத்தனை சாதனைகள் புரிந்தாலும் ‘புத்திசாலிப் பெண்’ என்பதை விட ‘அழகான பெண்’ என்பதற்கே முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது.
‘பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்’ என பெண்ணின் பருவங்களை நமது இலக்கியங்கள்

வரிசைப்படுத்தப்படுகின்றன.

இந்த ஒவ்வொரு பருவத்திலும், மகளாய், சகோதரியாய், தோழியாய், மனைவியாய், தாயாய், பாட்டியாய் பல்வேறு நிலைகளில் சிறப்புகளைப் பெற்றாலும் பெண்கள் வன்முறைக்கு ஆளாக்கப்படுவது தொடர்கதையாகத்தான் இருக்கிறது.


நோபெல் பரிசு பெற்ற அமர்தியசென் “மாயமாகிப் போன பெண்கள்” (Missing Women) என்ற கருத்தாக்கத்தை உருவாக்கினார். இச்சமுதாயம் பெ
ண்கள் மீது காட்டும் பாரபட்சம் மற்றும வன்முறைகளால் உலகெங்கிலும், சுமார் 10 கோடி பெண்கள் மறைந்து மாயமாகிப் போகிறார்களாம்! பாலியல் ரீதியான வன்முறைகளைத் தாண்டி, காதல் வயப்படும் பெண்கள் மீது பெற்றோர் தொடுக்கும் கௌரவக் கொலைகள்(Honour Killing), வடமாநில கிராமங்களில் விதவையாகவோ, தனியாகவோ வாழும் முதிய பெண்மணிகளின் சொத்தை அபகரிக்க, அவர்களை “சூரியக்காரி” என்று முத்திரை குத்திக் கொலை செய்வது (With Hunting), ஆகிய குற்றங்களும் கவலைக்குரியதாக உள்ளன.

‘ஆணும் பெண்ணும் சமம்’ என்கிறது அரசியல் சட்டம். ஆண் உயர்ந்தவன், பெண் தாழ்ந்தவள் என்கிறது சமூகச் சட்டம். அது கூடாது. ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், அவர்களின் தரத்தை தாழ்த்தாமல் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே உண்மையான மேம்பாடாக இருக்கும்.

மகாகவி பாரதியின் வரிகளை நினைவில் நிறுத்தி செயல்பட்டால் பாரதி கூறியது போலவே ‘நிமிர்ந்த நன்னடையும், நேர் கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நிமிர்ந்த ஞானச் செருக்கோடும்’ பெண்கள் உலா வரக் காணலாம்.


உலகம் முழுவதும் பல சமூக சீர்திருத்தவாதிகள் பெண்களுக்காகப் போராடினர். இந்தியாவில் ராசாராம் மோகன்ராய், மகாத்மா காந்தி, விவேகானந்தர் போன்ற பெருமக்கள குரல் கொடுத்தனர். தமிழகத்தில் இவற்றை முறைப்படுத்த ‘பிறக்கப்போகும் குழந்தைகளின் குறைபாடுகளை கண்டறிய உதவும் தொழில்நுட்பங்கள் சட்ட வரிசையில் முறைப்படுத்துதல் மற்றும் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுத்தல் சட்டம்’ 1994 ஆம் ஆண்டும் ‘பாலினத்தை தெரிவு செய்தல் தடை சட்டம்’ 2002ம் ஆண்டிலும் கொண்டு வரப்பட்டது. எங்கெல்லாம் ஸ்கேன் மையங்கள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் பெண்களின் விகிதம் குறைந்தே காணப்படுவதாக ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒரு குறிப்பிட்ட பாலினத்தை விரும்பும் போக்கு மக்களிடம் இல்லாத காரணததால் இது போன்ற பிரச்சனைகள் கிடையாது.