எலுமிச்சை ரவா உப்புமா

 எலுமிச்சை ரவா உப்புமா
தேவையான பொருட்கள்
ரவை ஒரு கப், எலுமிச்சம்பழம் ஒன்று, பொடியாக நறுக்கிய காய்கறிக்கலவை (கேரட், பீன்ஸ், பட்டாணி, முட்டைக்கோஸ்) கால் கப்,  பச்சை மிளகாய், துருவிய இஞ்சி, உப்பு, கருவேப்பிலை, எண்ணெய், கடுகு, பெருங்காயம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு  தேவையான அளவு.

செய்முறை
எலுமிச்சம்பழத்தை இரண்டாக நறுக்கி சாறு பிழியவும். ரவையை வெறும் வாணலியில் போட்டு லேசாக வறுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறுவேப்பிலை, பெருங்காயம், பச்சைமிளகாய், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, துருவிய இஞ்சி சேர்த்துத்தாளிக்கவும். பொடியாக நறுக்கிய காய்கறிக்கலவையை இதனுடன் சேர்த்துக்கிளறி தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். இத்துடன் வறுத்த ரவையை சேர்த்து லேசாகக்கிளறி நன்கு வேகவிடவும். வெந்தபிறகு எலுமிச்சம் பழச்சாற்றைக் கலந்து அடுப்பிலிருந்து இறக்கிப்பறிமாறவும்.