குலோப் ஜாமுன்


தேவையான பொருட்கள்
சர்க்கரை சேர்க்காத கோவா -  300 கிராம்
மைதா மாவு - 100 கிராம்
எண்ணெய் - அரைகிலோ
சர்க்கரை - அரைகிலோ
செய்முறை
கோவாவில் மைதாமாவைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து பத்து

நிமிடங்கள் கழித்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்தவுடன் லேசான தீயில் உருண்டைகளை பொரித்தெடுக்கவும்.
பாகு காய்ச்ச இரண்டு பங்கு சர்க்கரைக்கு ஒரு பங்கு தண்ணீர் சேர்த்து பாத்திரத்தை அடுப்பி்ல் வைக்கவும்.
சர்க்கரை பிசுக்குப் பதம் வந்நவுடன் இறக்கிவிட்டு, மிதமான சூட்டிற்குக் கொஞ்சம் அதிகமான சூட்டில் பாகு இருக்கும்போது, பொரித்த ஜாமுன் உருண்டைகளைப் போட்டு ஊறவைக்கவும்.
குறிப்பு
புதுமணப்பெண்கள் ரெடிமேட் ஜாமுன் மிக்ஸ் வாங்கி ஜாமுன் செய்ய விரும்பினால் அதிலிருக்கும் வழிமுறைகளைப் பின்பற்றி ஜாமுன் செய்யலாம். பாகில் பிசுக்குப்பதத்தை தெரிந்துகொண்டால் ஜம்மென்ற ஜாமுன் செய்யலாம். என்ன நாக்கில் எச்சில் ஊறுகிறதா? இன்றே செய்யுங்கள். நன்றே செய்யுங்கள்.