ஆர்யபட்டர் கி.பி.476 ம் ஆண்டு பிறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவரது நூலில் கூறப்பட்டுள்ள செய்திகளின் அடிப்படையில் இவர் முன்பு குசுமபுரம் என்றழைக்கப்பட்ட இன்றைய பாட்னாவில் பிறந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. ஆர்யபட்டர்
புகழ்பெற்ற கணித நூலாகிய ஆர்யபட்டீயம் என்னும் நூலை உலகிற்கு தந்துள்ளார். அந்நூல் தசகடிகம், கணிதம், காலக்கிரியம் மற்றும் கோளத்யாயம் என்னும் நான்கு பிரிவுகளை உள்ளடக்கியது ஆகும். ஆர்யபட்டர் தசகடிகம் என்னும் பகுதியில் கல்பம், யுனு, யுகம் போன்ற காலங்களின் தகவல்களையும், வளைவு கோணம், நுண்ணிய நீளங்களை அளக்கும் அளவை முறைகளைப்பற்றியும் கூறியுள்ளார். கணிதம் என்னும் 2 - வது பிரிவில் ஜியோமிதி வடிவங்களையும் அதன் குணங்களையும் அதனை அளவிடும் முறைகளையும் ஜியோமிதித் தொடர், இருமடி எண்கள், நெடுந்தொடர் எண்கள், வர்க்கமூலம் போன்றவற்றின் தகவல்களைக் கூறியுள்ளார். ஆர்யபட்டர் தனது காலக்கிரியம் என்னும் - 3 வது பகுதியி்ல் வானிலுள்ள கோள்களின் இடப்பெயர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு நேரங்களை அளவிடும் முறைகளைப் பற்றி விவரித்துள்ளார். நான்காம் பாகமாகிய கோளத்யாயத்தில் விண்ணுலகம் பற்றிய பல தகவல்களைக் கூறியுள்ளார்.