பழைய சாதம் மீந்துவிட்டால்

பழைய சாதம் மீந்துவிட்டால், சுவையான ஸ்நாக்ஸ் செய்து சாப்பிடலாம். ஒரு பெரிய கிண்ணத்தில், சாதத்தை நன்றாக பிழிந்து வைத்து, ஒரு கப் துருவிய தேங்காய், ஒரு தேக்கரண்டி சீரகம், சிறிது உப்பு கலந்து, கூழாக பிசைந்து, பிஸ்கட் சைஸில் தட்டிப் போட்டு, வெயிலில் காய வைத்து பொரித்து சாப்பிடலாம்.
வற்றல் பிழியும் கூழில், சிறிதளவு வடிகஞ்சியை சேர்த்தால், வற்றல் மிருதுவாக இருக்கும்.