இன்றைய காலகட்டத்தில் “மரம் நடுவது” என்பது பேஷனாகிவிட்டது. மரம் நடு விழாக்களைப் பற்றி நாள்தோறும் செய்தித்தாள்களில் படிக்கிறோம். ஆனால் அந்த மரங்கள் எல்லாம் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றனவா என்று கேட்டால், இல்லை என்பது தான் உண்மை. மரத்தை நட்டால் மட்டும் போதாது அவற்றை முறையாக பராமரிக்கவேண்டும். அப்படி பராமரித்தால் மட்டுமே மரம் நட்டதின் நோக்கம் நிறைவேறும். தூயகாற்றின் பிறப்பிடம் மரங்கள்தான்.