தேவையானவை
துருவிய நெல்லிக்காய் - ஒரு கப்
கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்
அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்
சோள மாவு - ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை
துருவிய நெல்லிக்காயுடன் சோள மாவு, அரிசி மாவு, கடலை மாவு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து கெட்டியாகக் கலந்து, தேவையெனில் சிறிது தண்ணீர் சேர்த்துப் பிசைந்து, எண்ணெயில் போட்டு பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும். சூடாக பரிமாற நாவிற்கு சுவையாக இருக்கும்