ஆர்க்கிமிடிஸ்


ஆர்க்கிமிடிஸ் கிரேக்க நாட்டில் சைரக்யூஸ் என்னும் நகரில் கி.மு. 287 - ல் பிறந்தார். இவருடைய காலம் கி.மு. 287 - 212 ஆகும். இவர் மிகச்சிறந்த கணிதமேதை ஆவார். இவர் கணிதத்தில் மட்டுமின்றி
இயற்பியலிலும் சிறந்து விளங்கினார். இவரது தந்தை வானசாஸ்திர நிபுணர். ஆர்க்கிமிடிஸ் வகுத்துத்தந்த கொள்கைகள் ஆர்க்கிமிடிஸ் கொள்கைகள் என அழைக்கப்படுகின்றன. ஒரு திரவத்தில் திடப்பொருள் தங்கு தடையின்றி மூழ்கி இருக்கும்போது வெளியேற்றப்பட்ட திரவத்தின் எடை மூழ்கிய பொருளின் எடைக்கு சமமாக இருக்கும். இதுவே ஆர்க்கிமிடிஸ் கொள்கையாகும். ஆர்க்கிமிடிசின் உலகறிந்த மற்றொரு மிகச்சிறந்த கண்டுபிடிப்பு நெம்புகோல் தத்துவமாகும். அதாவது நெம்புகோலையும் சிறிய தடுப்பானையும் பயன்படுத்தி மிக அதிக எடையுள்ள பொருளையும் மிகக்குறைவான ஆற்றலால் நகர்த்த முடியும் என்பதே நெம்புகோல் தத்துவமாகும்.