சிறு குறிப்புகள்


பஜ்ஜி செய்ய, விருந்துகளில் அலங்கரிக்க வெங்காயத்தை வட்டமாக நறுக்குவது வழக்கம். வெங்காயத்தின் தோலை உரிக்காமலேயே வட்டங்களாக வெட்டி விட்டுப் பிறகு உரித்தால் வெங்காயம் பிரியாமல் அப்படியே இருக்கும்.
*****
நான் ஸ்டிக் கல்லில் தோசை வார்க்கும்போது எண்ணெய் சீராக பரவ ஒரு வழி. மாவை கல்லில் வட்டமாக ஊற்றி பரப்பி ஏதேனும் ஒரு ஓரத்தில் மட்டும் எண்ணெயை விடவும். தோசைக்கல்லின் கைப்பிடியை பிடித்துக்கொண்டு லேசாகச் சரித்தால் எண்ணெய் தோசையின் எல்லா இடங்களிலும் பரவி விடும்.
*****
சுண்டல் செய்வதற்கு முன் கடலையை ஊறவைக்க மறந்து விட்டாலும் கவலை இல்லை. வெறும் கடாயை சூடாக்கி, அதில் கடலையைப் போட்டு ஐந்தாறு நிமி்டங்கள் நன்றாக வறுத்துக்கொள்ளுங்கள். இரு மடங்கு தண்ணீரை கொதிக்கவைத்து அதில் சூடான கடலையைப் போட்டு குக்கரில் வைத்தால் கடலை நன்றாக வெந்துவிடும்.

*********************************************************************************
பஞ்சு போன்ற இட்லி வேண்டுமா?
 


பஞ்சு போன்ற இட்லி வேண்டுமா? கிரைண்டரில் உளுத்தம் பருப்பை அரைக்கும்போது, அது பாதி மசிந்ததும் ஏழெட்டு ஐஸ்கியூப்களைப் போட்டு அரையுங்கள்.மாவும் அதிகம் வரும் இட்லியும் மெத்தென்று மென்மையாக இருக்கும்.

 ********************************************************************************

குக்கரை திறந்து சாதத்தை எடுக்கும்போது சில நேரங்களில் தட்டின் மீது நீர் தேங்கியிருக்கும். உடனே மீண்டும் குக்கரை மூடி, வெயிட் போடாமல் ஐந்து நிமிடங்கள் எரிய விடுங்கள். அதிகப்படி தண்ணீர் ஆவியாகி சாதம் சரியாக வெந்துவிடும்.

*********************************************************************************

பூரி மொறுமொறுப்புடன் இருக்க

பூரி மொறுமொறுப்புடன் இருக்க.. மாவைப்பிசைந்து தேய்த்த பிறகு அதை ஒரு டப்பாவில் போட்டு அரை மணி நேரம் ஃபிரிட்ஜில் வைத்து விடுங்கள். பிறகு எடுத்துப் பொரித்தால் பூரி க்ரிஸ்பியாக இருப்பதுடன் எண்ணெயும் அதிகம் குடிக்காது