நண்டு குழம்பு


தேவையான பொருட்கள்
நண்டு                                    - அரை கிலோ
சிறிய வெங்காயம்     - 100 கிராம்
தக்காளி                              - 1
பூண்டு                                  - 10 பல்
புளி                                        - சிறிதளவு
வரமிளகாய்                   - 25
மிளகு                                 - 1 ஸ்பூன்
தேங்காய்                         - அரை முடி
மஞ்சள்தூள்                   - சிறிதளவு
கசகசா                               - கால் ஸ்பூன்
எண்ணெய்                     - 5 ஸ்பூன்
உப்பு, கருவேப்பிலை - தேவையான அளவு
வெந்தயம், சோம்பு, சீரகம் - சிறிதளவு


செய்முறை
நண்டை உடைத்து சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பூண்டு நறுக்கிக்கொள்ளவும். வரமிளகாய், மிளகு, சோம்பு, கசகசா, தேங்காய், புளி, உப்பு ஆகியவற்றை நைசாக அரைத்துக்கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி வெந்தயம், சோம்பு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து வெங்காயம், தக்காளி, பூண்டு, கருவேப்பிலை போட்டு வதங்கியவுடன் நண்டையும் போட்டு நன்றாக வதக்கிக்கொள்ளவும். பிறகு அரைத்து வைத்துள்ள மசாலாவைப் போட்டு வதக்கி 3 டம்ளர் தண்ணீர்விட்டு மூடிவைக்கவும். சிறிது கெட்டியாக வந்தவுடன் இறக்கி பரிமாறினால் கம கம என மணக்கும்.