சிந்தனைக்கு

***************************************************************************

கோபத்தில் ஒரு முடிவும் எடுக்காதே
மகிழ்ச்சியில் ஒரு வாக்கும் கொடுக்காதே
அழுகையில் ஒருவரையும் நம்பாதே


**************************************************************************
திருமணம் செய்யும் பெற்றோர்கள் தங்கள் மகன் அல்லது மகளுக்கு பொருத்தம் பார்க்கும் போது பத்து பொருத்தம் சரியாக உள்ளதா என பார்க்கின்றனர் அந்த பத்து பொருத்தம் என்ன?


மணமக்களுக்கு இருக்கவேண்டிய பத்து பொருத்தங்கள்


1. நட்சத்திரப்பொருத்தம்
2. கணப்பொருத்தம்
3. மகேந்திரப்பொருத்தம்
4. ஸ்திரி பொருத்தம்
5. யோனிப்பொருத்தம்
6. இராசிப்பொருத்தம்
7. இராசி அதிபதி பொருத்தம்
8. வசியப்பொருத்தம்
9. வேதைப்பொருத்தம்
10. சரட்டுப்பொருத்தம்


*******************************************************************************

திருமணத்தின்போது மணமக்களை பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று வாழ்த்துகிறோம்.
அந்த பதினாறு
1. புகழ்
2. கல்வி
3. வலிமை
4. வெற்றி
5. நன்மைகள்
6. பொன்
7. நெல்
8. நல்விதி
9. நுகர்ச்சி
10. அறிவு
11. அழகு
12. பெருமை
13. இனிமை
14. துணிவு
15. நோயின்மை
16. நீண்ட ஆயுள்


******************************************************************************
வசந்தம் ஒரே நாளில் மலர்ந்து விடுவதில்லை. அதேபோல வாழ்வில் உயர்வும் ஒரே நாளில் கிட்டிவிடாது 

ஊக்கம் உயர்வு தரும் ஆக்கத்துறையில் அறிவைச்செலுத்தி ஊக்கமுடன் உழை உயர்வு நிச்சயம்
**********************************************************************
தெரியாது"
என்று தெருவில் நின்று விடாதே...
"முடியாது"
என்று மூலையில் முடங்கிக் கிடக்காதே...
சாதிக்கப்பிறந்தவ(ள்)ன் நீ... என்பதை மட்டும் மறந்து விடாதே

****************************************************************************
மனதை எப்போதும் இளமையாகவும் உற்சாகமாகவும் வைத்திருக்கவேண்டும் -- அன்னை ஸ்ரீ சாரதா தேவியார்****************************************************************************
தாயின் கண்ணீரைத் துடைப்பவனே சிறந்த மகன் - வேல்ஸ்
தாயின் கோபம், பூ மேல் விழுந்த பனி மாதிரி - கார்ல் மார்க்ஸ்
குழந்தையை கையில் ஏந்தி நிற்கும் தாயை விட அதிக அழகான காட்சி எதுவும் கிடையாது - கதே
தாயை மதிக்காதவன் தரணியி்ல் வாழ்வது துன்பகாரியமாகும் - மு.வ
தாயின் மடி குழந்தையின் விளையாட்டுக் கூடமாகும் - ஆபிரகாம் லிங்கன்

சுறுசுறுப்பானவர்களுக்கு கண்ணீர் விட  நேரம் இருக்காது.
அன்பைக் கடன்கொடு, அது அதிக வட்டியுடன் உன்னிடம் திரும்பிவரும்.
சரியாக சிந்திக்கத் தெரிந்துகொண்டால் உலகத்தையே மாற்றிவிடலாம்.
உள்ளம் வசமானால் உலகம் வசமாகும்.
பிறருக்கு நன்மை செய்பவன் தனக்கும் நன்மை தேடிக்கொள்கிறான்.
தகுதியில்லாத புகழ்ச்சி மறைமுகமான அவதூறு.
உழைக்கும் மனிதனின் உறக்கம் இனிமை நிறைந்தது.