பைபிள் பொன்மொழிகள்

 இயேசுநாதர்

1. நீ செய்ய நினைக்கும் செயல் எதுவோ அதைச்செய். அதையும் உனக்கு    ஆற்றல் இருக்கும்போதே செய்.


2. கயமை புரியும் ஒவ்வொருவரும் ஒளியை வெறுப்பர்.

3. கேளுங்கள் கொடுக்கப்படும், தேடுங்கள் கண்டறிவீர், தட்டுங்கள் திறக்கப்படும்.

4. ஒருவன் உன் வலது கன்னத்தில் அறைந்தால் அவனுக்கு மறு கன்னத்தை காட்டு.

5. நீதியின் பொருட்டு துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள் பரலோக ராஜ்ஜியம் அவர்களுடையது.

6. சிறுவிஷயத்தில் தவறாக நடப்பவர்கள் பெரிய விஷயத்திலும் தவறாக நடப்பர்.

7. அன்புள்ள இடத்தில் அச்சமில்லை. தூய அன்பு அச்சத்தை துரத்திவிடவல்லது.

8. செல்வத்திடம் இருக்கும் பேராசைதான் தீமைகள் அனைத்திற்கும் வேர்.

 
9. துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் கடவுள் அருளால் ஆறுதலை அடைவர்.

10. கவலைப்படுவதால் யாராவது ஒரு முழமேனும் உயர்ந்து விடமுடியமா?

11. நிறை கண்டால் போற்றுங்கள், குறை கண்டால் ஒன்றும் கூறாதீர்கள்

12. கோபமும் பொறாமையும் மனிதனை கொன்றுவிடும் சக்தி படைத்தவை

13. முட்டாளின் கோபம் விரைவில் வெளிப்பட்டுவிடும். கோபத்தை அடக்குபவனே மனிதன்.

14. அன்பான வார்த்தை பேசுங்கள் நிறைய பலன் கிடைக்கும். கோபப்படுவதினால் பயன் ஒன்றும் விளையப்போவதில்லை.

 
15. நல்ல மரங்கள் நல்ல கனிகளைக்கொடுக்கும். நல்ல மனிதர்கள் நல்லதையே செய்வர்.

16. ஒருவரும் துரத்தாவிடினும் தீயவர் பயந்து ஓடுவர். நல்லவர் எப்போதும் ஏறுபோல் வீற்றிருப்பர்.

...................................................................................................................................................................
....................................................................................................................................................................

1. உன் சகோதரன் உனக்கு எதிராக ஏதாவது செய்திருப்பானேயானால் நீ போய் அவன் தனித்திருக்கையில் அவனுடைய தவறை கண்டித்துச்சொல்.

2. புரிந்து கொள்பவனுக்கு ஞானம் என்பது அவன் எதிரேயே இருக்கிறது. முட்டாளின் கண்களோ உலகின் கடைசிக்கோடி வரை தேடியலையும்.
 
3. உன்னுடைய கண் தீமையானதாயிருந்தாலோ, உன் உடல் முழுதும் இருள் உள்ளதாயிருக்கும். ஆதலின் உன்னுள்ளே இருக்கும் ஒளியே இருளாயிருந்தால் இருட்டு எவ்வளவு பெரியதாயிருக்கும்?
 
4. நிலைத்து நிற்பதாக நினைப்பவன் கீழே விழாதபடி கவனமாயிருக்கட்டும்.
 
5. உடைந்த உள்ளம் உடையவர்களுக்கு கர்த்தர் வெகு சமீபத்தில் இருக்கிறார்.
 
6. கணவர்களே மனைவியைக் காதலியுங்கள். அவர்களுக்கு மாறாகக் கசப்பாயிராதீர்கள்.