வண்டிக்காரனும் தேவதையும்

ஒரு வண்டிக்காரன் தன் வண்டியை ஓட்டிக்கொண்டு போனான். போகும் வழியில் ஓர் இடத்தில் குழி ஒன்றில் சக்கரம் மாட்டிக்கொண்டது. மேலே போகமுடியவில்லை, உடனே வண்டிக்காரன் தன் இஷ்ட தேவதையை நினைத்துப் பிரார்த்தனை செய்தான். உடனே தேவதை தோன்றினாள். வண்டிக்காரன் தன் வண்டியை மீட்கும்படி வேண்டினான். தேவதை வண்டிக்காரணைப் பார்த்து அடே சோம்பேறி நீ வண்டியை நகர்த்த ஒரு முயற்சியும் செய்யாமல் என்னை பிரார்த்தனை செய்கிறாயே, முதலில் உன் கடமையை செய், மாடுகளை தனியாக அவிழ்த்துவிட்டு விடு பிறகு சக்கரத்தில் உன் தோளைக் கொடுத்து தூக்கிவிடு, இந்த இரண்டையும் செய்த பின்பும் வண்டியை நகர்த்த என் உதவி தேவைப்பட்டால் கேள் செய்கிறேன் என்று கூறி தேவதை மறைந்தது.

நீதி. முயற்சி உடையவனுக்குத்தான் தெய்வமும் உதவி செய்கிறது.