*****************************************************************************
1. குயில்பாட்டு எழுதியவர் யார்?
a) நாமக்கல் கவிஞர்
b) பாரதியார்
c) பாரதிதாசன்
d) பிச்சமூர்த்தி
2. இராவ்பகதூர் சி.வை.தாமோதரம்பிள்ளை
அவர்களால் பரிதிமாற்கலைஞர் எவ்வாறு சிறப்பிக்கப்பட்டார்?
a) தமிழ்ஞானம்
b) செம்மொழிப்புலவன்
c) திராவிடசாஸ்திரி
d) தமிழ்ச்செம்மல்
3. திரு.வி.க. பிறந்த ஊர் எது?
a) காஞ்சிபுரம்
b) பேரூர்
c) பசும்பொன்
d) துள்ளம்
4. திருவாரூர் நான்மணிமாலையின் ஆசிரியர் யார்?
a) திருவாதவூரார்
b) குமரகுருபரர்
c) கோவூர்கிழார்
d) நக்கீரர்
*******************************************************************************
*************************************************************************
பிரித்து எழுதுக
1. அன்பகத்து இல்லா = அன்பு + அகத்து + இல்லா
2. வன்பாற்கன் = வன்பால் + கண்
3. தளிர்த்தற்று = தளிர்த்து + அற்று
4. தமக்குரியர் = தமக்கு + உரியர்
5. அன்பீனும் = அன்பு + ஈனும்
6. நிழலருமை = நிழல் + அருமை
7. நன்கணியர் = நன்கு + அணியர்

இங்கு கிளிக் செய்யவும்

ஆசிரியர் குறிப்பு
இராமலிங்க அடிகளார்
இராமலிங்க அடிகளார் திருவருட்பிரகாச வள்ளலார் என்னும் சிறப்புப்பெயர் பெற்றவர். இவர் கடலூர் மாவட்டம் மருதூரில் பிறந்தார். பெற்றோர் இராமையா - சின்னம்மையார்.
ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறை கண்டவாசகம் ஆகிய நூல்கள் இவர் எழுதியவை. இவர் பாடல்கள் அனைத்தும் திருவருட்பா என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.
சமரச சன்மார்க்க நெறியை வழங்கியவர் இவரே. இவர் அனைத்து மத நல்லிணக்கத்திற்காக சன்மார்க்க சங்கத்தையும், பசித்துயர் போக்கி மக்களுக்கு உணவளிக்க அறச்சாலையையும் அமைத்தவர். அறிவுநெறி விளங்க ஞானசபையையும் நிறுவியவர்.
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய கருணை மனம் இவருடையது. வடலூர் சத்திய தருமச்சாலையில் பசியால் வாடும் மக்களுக்குச் சோறிட இவர் அன்று மூட்டிய அடுப்பு இன்றும் அணையாமல் தொடர்ந்து பசிப்பிணி தீர்த்து வருகிறது. இவர் வாழ்ந்த காலம் 05.10.1823 முதல் 30.01.1874 வரை ஆகும்.

வழிகாட்டும் வள்ளலார்!
ராமையா&சின்னம்மை தம்பதிக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தன. சபாபதி, பரசுராமர் என்ற ஆண் குழந்தைகளும் உண்ணாமுலை, சுந்தரம்மாள் என்ற பெண் மக்களும் பிறந்து, ஐந்தாவதாக ஓர் ஆண்குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ராமலிங்கம் எனப் பெயர் சூட்டினர்.
ராமலிங்கம் பிறந்த ஆறாவது மாதத்தில் தந்தை ராமையா காலமானார். சின்னம்மை, தன் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் கருதி சென்னைக்கு வந்து சேர்ந்தார்.
மூத்த மகன் சபாபதி, காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதியிடம் கல்வி பயின்றார். புராணச் சொற்பொழிவில் வல்லவரானார். சொற்பொழிவுகளுக்குச் சென்று வருவதன் மூலம் கிடைக்கும் பொருளை வைத்துக் குடும்பம் நடத்தி வந்தார்.
புராணச் சொற்பொழிவு செய்யும் அண்ணன் சபாபதிக்கு, ஒருமுறை உடல்நலம் குன்றியதால் ஒப்புக்கொண்ட சொற்பொழிவுக்குச் செல்ல முடியவில்லை. எனவே அவர், தம்பி ராமலிங்கத்திடம் சொற்பொழிவு நடக்கவுள்ள இடத்துக்குச் சென்று, சில பாடல்களைப் பாடி, தான் வரமுடியாத குறையைத் தீர்த்துவிட்டு வருமாறு கூறினார். அதன்படி ராமலிங்கம் அங்கு சென்றார்.
அன்றைய தினம் சபாபதியின் சொற்பொழிவைக் கேட்க ஏராளமானோர் கூடியிருந்த னர். அண்ணன் சொன்ன படியே சில பாடல்களை மனமுருகப் பாடினார் ராமலிங்கம். இதன்பின், அவரிடம் ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்த்துமாறு அங்கு கூடியிருந்தோர் வெகுநேரம் வற்புறுத்தினர். எனவே, ராமலிங்கமும் அதற்கு இசைந்தார்.
அந்தச் சொற்பொழிவு இரவில் நெடுநேரம் நிகழ்ந்தது. அனைவரும் வியந்து போற்றினர். இதுவே அவருடைய முதல் சொற்பொழிவு. அப்போது அவருக்கு வயது ஒன்பது.
பலரது வற்புறுத்தலுக்கு இணங்க, ராமலிங்கம் தன் இருபத்தேழாவது வயதில் திருமணத்துக்குச் சம்மதித்தார். அவர் சகோதரி உண்ணாமுலையின் மகள் தனக்கோடியைத் திருமணம் செய்துகொண்டார்.
இராமலிங்க அடிகளார் ஆசிரியர் குறிப்பை வீடியோவில் பார்க்க
இங்கு கிளிக் செய்யவும்
**************************************************************************

1. ''கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்'' எனக்கூறியவர் யார்?
விடை : இராமலிங்க அடிகளார்
2. இராமலிங்க அடிகளார் அவர்களின் சிறப்புப்பெயர் என்ன?
விடை : திருவருட்பிரகாச வள்ளலார்
3. இராமலிங்க அடிகளார் அவர்களின் பெற்றோர் யாவர்?
விடை : இராமையா - சின்னம்மையார்

4. இராமலிங்க அடிகளார் அவர்கள் பிறந்த ஊர் எது?
விடை : கடலூர் மாவட்டத்திலுள்ள மருதூர்
5. இராமலிங்க அடிகளார் எழுதிய நூல்கள் யாவை?
விடை : ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறை கண்ட வாசகம்
6. இராமலிங்க அடிகளார் இயற்றிய பாடல்களின் தொகுப்பின் பெயர் என்ன?
விடை : திருவருட்பா
7. ''வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்'' இது யார் கூற்று?
விடை : இராமலிங்க அடிகளார்
8. பசித்துயர்போக்கி மக்களுக்கு உணவளிக்க அறச்சாலை அமைத்தவர் யார்?
விடை : இராமலிங்க அடிகளார்
9. மக்களுக்கு அறிவுநெறி விளங்க இராமலிங்க அடிகளார் எதனை நிறுவினார்?
விடை : ஞானசபை
10. இராமலிங்க அடிகளார் அவர்கள் வாழ்ந்த காலம் எது?
விடை : 05-10-1823 முதல் 30-01-1874 வரை
11. திருக்குறளை இயற்றியவர் யார்?
விடை : திருவள்ளுவர்
12. திருவள்ளுவரின் வேறு பெயர்கள் யாவை?
விடை : செந்நாப்போதார், தெய்வப்புலவர், நாயனார்
13. திருவள்ளுவர் வாழ்ந்த காலம் எது?
விடை : கி.மு 31
14. திருவள்ளுவர் ஆண்டு எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
விடை : கிறித்து ஆண்டு + 31 = திருவள்ளுவர் ஆண்டு
உ.ம் 2012+31=2043
15. திருக்குறள் எத்தனை பிரிவுகளைக் கொண்டது?
விடை : மூன்று (அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால்)
*************************************************************************
பிரித்து எழுதுக
1. அன்பகத்து இல்லா = அன்பு + அகத்து + இல்லா
2. வன்பாற்கன் = வன்பால் + கண்
3. தளிர்த்தற்று = தளிர்த்து + அற்று
4. தமக்குரியர் = தமக்கு + உரியர்
5. அன்பீனும் = அன்பு + ஈனும்
6. நிழலருமை = நிழல் + அருமை
7. நன்கணியர் = நன்கு + அணியர்
*****************************************************************************
PDF FORMAT
ஆசிரியர் குறிப்பு - இராமலிங்க அடிகளார் PDF FORMAT டிற்குஇங்கு கிளிக் செய்யவும்
*****************************************************************************
ஆசிரியர் குறிப்பு
இராமலிங்க அடிகளார்
இராமலிங்க அடிகளார் திருவருட்பிரகாச வள்ளலார் என்னும் சிறப்புப்பெயர் பெற்றவர். இவர் கடலூர் மாவட்டம் மருதூரில் பிறந்தார். பெற்றோர் இராமையா - சின்னம்மையார்.
ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறை கண்டவாசகம் ஆகிய நூல்கள் இவர் எழுதியவை. இவர் பாடல்கள் அனைத்தும் திருவருட்பா என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.
சமரச சன்மார்க்க நெறியை வழங்கியவர் இவரே. இவர் அனைத்து மத நல்லிணக்கத்திற்காக சன்மார்க்க சங்கத்தையும், பசித்துயர் போக்கி மக்களுக்கு உணவளிக்க அறச்சாலையையும் அமைத்தவர். அறிவுநெறி விளங்க ஞானசபையையும் நிறுவியவர்.
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய கருணை மனம் இவருடையது. வடலூர் சத்திய தருமச்சாலையில் பசியால் வாடும் மக்களுக்குச் சோறிட இவர் அன்று மூட்டிய அடுப்பு இன்றும் அணையாமல் தொடர்ந்து பசிப்பிணி தீர்த்து வருகிறது. இவர் வாழ்ந்த காலம் 05.10.1823 முதல் 30.01.1874 வரை ஆகும்.
*************************************************************************
வழிகாட்டும் வள்ளலார்!
ராமையா&சின்னம்மை தம்பதிக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தன. சபாபதி, பரசுராமர் என்ற ஆண் குழந்தைகளும் உண்ணாமுலை, சுந்தரம்மாள் என்ற பெண் மக்களும் பிறந்து, ஐந்தாவதாக ஓர் ஆண்குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ராமலிங்கம் எனப் பெயர் சூட்டினர்.
ராமலிங்கம் பிறந்த ஆறாவது மாதத்தில் தந்தை ராமையா காலமானார். சின்னம்மை, தன் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் கருதி சென்னைக்கு வந்து சேர்ந்தார்.
மூத்த மகன் சபாபதி, காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதியிடம் கல்வி பயின்றார். புராணச் சொற்பொழிவில் வல்லவரானார். சொற்பொழிவுகளுக்குச் சென்று வருவதன் மூலம் கிடைக்கும் பொருளை வைத்துக் குடும்பம் நடத்தி வந்தார்.
புராணச் சொற்பொழிவு செய்யும் அண்ணன் சபாபதிக்கு, ஒருமுறை உடல்நலம் குன்றியதால் ஒப்புக்கொண்ட சொற்பொழிவுக்குச் செல்ல முடியவில்லை. எனவே அவர், தம்பி ராமலிங்கத்திடம் சொற்பொழிவு நடக்கவுள்ள இடத்துக்குச் சென்று, சில பாடல்களைப் பாடி, தான் வரமுடியாத குறையைத் தீர்த்துவிட்டு வருமாறு கூறினார். அதன்படி ராமலிங்கம் அங்கு சென்றார்.
அன்றைய தினம் சபாபதியின் சொற்பொழிவைக் கேட்க ஏராளமானோர் கூடியிருந்த னர். அண்ணன் சொன்ன படியே சில பாடல்களை மனமுருகப் பாடினார் ராமலிங்கம். இதன்பின், அவரிடம் ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்த்துமாறு அங்கு கூடியிருந்தோர் வெகுநேரம் வற்புறுத்தினர். எனவே, ராமலிங்கமும் அதற்கு இசைந்தார்.
அந்தச் சொற்பொழிவு இரவில் நெடுநேரம் நிகழ்ந்தது. அனைவரும் வியந்து போற்றினர். இதுவே அவருடைய முதல் சொற்பொழிவு. அப்போது அவருக்கு வயது ஒன்பது.
பலரது வற்புறுத்தலுக்கு இணங்க, ராமலிங்கம் தன் இருபத்தேழாவது வயதில் திருமணத்துக்குச் சம்மதித்தார். அவர் சகோதரி உண்ணாமுலையின் மகள் தனக்கோடியைத் திருமணம் செய்துகொண்டார்.
இராமலிங்க அடிகளார் ஆசிரியர் குறிப்பை வீடியோவில் பார்க்க
இங்கு கிளிக் செய்யவும்
**************************************************************************
தமிழ்
1. தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்?
(அ)நான்கு (ஆ)மூன்று (இ)ஐந்து (ஈ)ஆறு
2. கீழ்க்கண்டவற்றுள் சுட்டெழுத்து என்பன எவை?
(அ)அ,இ,உ (ஆ)ஆ,ஓ,ஏ (இ)எ,யா,உ (ஈ)யா,ஏ
3. பெயர்ச்சொற்கள் எத்தனை வகைப்படும்?
(அ)நான்கு (ஆ)ஐந்து (இ)ஆறு (ஈ)இரண்டு
4. கீழ்க்கண்டவற்றுள் பண்புப்பெயர் எதன் அடிப்படையில் வழங்கப்படும்
(அ)காலம், இடம் (ஆ)ஒருமை, பன்மை
(இ)தன்மை, முன்னிலை, படர்க்கை (ஈ)சுவை, அளவு, வடிவம்.
5. தமிழில்ஓரெழுத்து ஒருமொழி
(அ) 42 (ஆ) 43 (இ) 40 (ஈ) 44
6. சார்பெழுத்துக்களின் எண்ணிக்கை (வகை)
(அ) 216 (ஆ) 234 (இ) 10 (ஈ) 30
7. கற்றவர்களுக்கு மட்டுமே விளங்கக் கூடியனவாய் அமைந்த சொல்
(அ) இயற்சொல் (ஆ) திரிசொல் (இ) திசைச்சொல்
(ஈ) வடச்சொல்
8. கலகல என்பது
(அ) இரட்டைக்கிளவி (ஆ) அடுக்குத்தொடர் (இ முற்றுத்தொடர் (ஈ) எதுவுமில்லை.
9. தொகை நிலைத்தொடர்கள் எத்தனை வகைப்படும்?
(அ) மூன்று (ஆ) நான்கு (இ) ஐந்து (ஈ) ஆறு.
10. பொற்றொடி வந்தாள் என்பது
(அ) உவமைத்தொகை (ஆ) வேற்றுமைத்தொகை
(இ) அன்மொழித்தொகை (ஈ) உம்மைத்தொகை