சாலட் மற்றும் பச்சடிகள்

********************************************************************************

                                             இஞ்சிப் பச்சடி

தேவையானவை:

இஞ்சி - 100 கிராம்,
புளி - சிறிதளவு,
எலுமிச்சை - 4,
பெரிய வெங்காயம் - 2,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

தோல் நீக்கிய இஞ்சியுடன் புளி சேர்த்து நன்றாக அரைக்கவும்.

இதனுடன் நறுக்கிய வெங்காயம், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கினால், இஞ்சிப் பச்சடி தயார்.

மருத்துவப்பயன்:

பித்தம், மூட்டு வலி, சளி, இருமல் போக்கும். பசியைத் தூண்டும்.

*********************************************************************************
இஞ்சிப் பச்சடி

தேவையானவை:

இஞ்சி - 100 கிராம்,
புளி - சிறிதளவு,
எலுமிச்சை - 4,
பெரிய வெங்காயம் - 2,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

தோல் நீக்கிய இஞ்சியுடன் புளி சேர்த்து நன்றாக அரைக்கவும்.

இதனுடன் நறுக்கிய வெங்காயம், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கினால், இஞ்சிப் பச்சடி தயார்.

மருத்துவப்பயன்:

பித்தம், மூட்டு வலி, சளி, இருமல் போக்கும். பசியைத் தூண்டும்.

 ********************************************************************************
                                        வாழைத்தண்டு சாலட்

தேவையான  பொருட்கள்:

பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு - ஒரு கப்
ஊற வைத்த பயத்தம் பருப்பு - கால் கப்

கொத்த மல்லி இலை - சிறிதளவு
மிளகுத் தூள்- கால் தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - ஒரு மேஜைக் கரண்டி

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

முதலில் பயத்தம்பருப்பை வேகைவத்துக்கொள்ளவேண்டும். பின்னர் வாழைத்தண்டுடன் வேக வைத்த பயத்தம்பருப்பு, எலுமிச்சை சாறு, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கலக்கவும். கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும். 

இந்த சாலட் சீறுநீரகத்தை பலப்படுத்தும். உடம்பில் உள்ள கூடுதல் உப்பை வெளியேற்றும். மலச்சிக்கல் சரியாகும்.