அரசியல் காமெடி
எதுக்கய்யா தலைவர் நெஞ்சுல அடிக்கடி தண்ணீர் தெளிக்கிறாரு?
எதிர்க்கட்சிக்காரங்க தலைவருக்கு நெஞ்சுல ஈரமே இல்லைனு
சொல்றாங்களாம்.
அரசியல்வாதி மேடையில்
நான் மழைக்காக பள்ளிக்கூடத்தில் ஒதுங்கியது கிடையாது. உண்மைதான்.. காரணம் எப்பொழுதும் நான் குடையுடன்தான் செல்வேன் என்பதை மாற்றுக்கட்சி தோழருக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
பொதுமக்களில் ஒருவர்: யோவ், எரிஞ்சிக்கிட்டிருக்கிற குடிசைகளைத்தான் அணைச்சிக்கிட்டிருக்காங்களே நீ என்னய்யா தீ வைக்கிற
தொண்டன் : தலைவர் எரியற குடிசையை பார்க்கணும்னு போன் பண்ணாரு அதான்...
மேடையில் (தலைவர் தொண்டனை பார்த்து)
எத்தனை மாலைக்கு பணம் கொடுத்தே
தொண்டன் : பதினைந்து மாலைக்கு தலைவரே
தலைவர் : பின்ன எப்படிய்யா பத்து மாலைதான் வந்திருக்கு?