மல்டி வெஜிடபிள் குழிப்பணியாரம்


தேவையான பொருட்கள்:
    இட்லி புழுங்கள் அரிசி     - ஒரு கப் (பெரியது)
    வெந்தயம்                                - ஒரு டேபிள் ஸ்பூன்
    உளுத்தம்பருப்பு                  - ஒரு டீ ஸ்பூன்
    நறுக்கிய பச்சைமிளகாய்    - 1


    கடுகு                                                    - அரை டீ ஸ்பூன்
    எண்ணெய்                                      - அரை டீ ஸ்பூன்
    கேரட் துருவல்                            - ஒரு கப்
    பொடியாக நறுக்கிய கோஸ்    - ஒரு கப்
    குடமிளகாய்                                        - ஒரு கப்
    உப்பு                                                           - தேவையான அளவு
    நெய்                                                           - ஒரு சிறிய கப்
செய்முறை:
    புழுங்கல் அரிசியுடன் வெந்தயம், உளுத்தம்பருப்பை சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற வைத்து நைசாக அரைக்கவும். இதில் தேவையான அளவு உப்பு சேர்ததுக்கலக்கவும். கடாயில் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து கேரட், கோஸ், குடமிளகாய், பச்சைமிளகாய் மற்றும் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். இதனை மாவில் சேர்த்து கலக்கவும். பணியாரக்குழியில் சிறிது எண்ணெய்விட்டு மாவை ஊற்றி மிதமான தீயில் இருபுமும் வேகவைத்து எடுக்கவும்.
    காய்கறிகள் சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் பணியாரம் இதுவாகும்.