ஊர்முழுக்க ஒரே பந்தல் அது என்ன?
வானம்
எளிதில் உடையும் புட்டியில் இரண்டு ஸ்ட்ராங் தைலம் அது என்ன?
முட்டை
அடிபட்டவன் அழுதால் அதுவே ஆனந்த ராகம் பலருக்கு, அது என்ன?
மேளம்
பச்சைப்பெட்டியில் பத்துச்சரம் முத்து அது என்ன?
வெண்டைக்காய்
விரிந்த ஏரியில் வெள்ளி ஓடம் மிதக்குது அது என்ன?
சந்திரன்
தோலை உரித்தால் அழமாட்டான், உரித்தவனை அழவைப்பான் அவன் யார்?
வெங்காயம்
மூன்று திருடர்களைச் சுற்றி ஒரு டஜன் போலீஸ் அவர்கள் யார்?
கடிகாரம், முட்கள்