பூசணி குல்கந்து


தேவையானவை
முற்றிய பூசணிக்காய்      ...      கால் கிலோ
சர்க்கரை                                     ...      250 கிராம்
ஏலக்காய்த்தூள்                     ...     சிறிதளவு


நெய்                                                ...     ஒரு சிறிய கப்
முந்திரிப்பருப்பு                     ...     10
கேசரி பவுடர்                            ...     ஒரு சிட்டிகை
செய்முறை
பூசணிக்காயை தோல் சீவி, நறுக்கி, வேகவைத்து, அரைத்து, ஒரு துணியில் வடிகட்டி, விழுதை மட்டும் தனியே வைக்கவும். இதனுடன் சர்க்கரை சேர்த்து கேசரி பவுடர், ஏலக்காய்த்தூள் போட்டு கெட்டியாகக் கிளறவும். சிறிது நெய்யில் முந்திரிப்பருப்பை வறுத்துப்போட்டு மீதமுள்ள நெய்யைக் கொட்டி நன்றாகக்கிளறி இறக்கவும்.
குறிப்பு பூசணிக்காயை தோல் சீவி துருவியும் செய்யலாம்.
விருப்பப்பட்டால் சிறிது குங்குமப்பூ சேர்க்கலாம்.