உடலைவிட வயிறு பெரிது


அதிசய உயிரினங்களில் ஒன்று 'ஆங்லர் பிஷ்' எனப்படும் மீன். ஆழ்கடலில் வாழும் இவற்றுக்கு உணவுத்தேடல் பெரும் சுமையாகும். அதனால் கிடைக்கும் உணவை வயிறு நிறைய தின்று கொள்ள இதன்
வயிறு உடலைவிட பலமடங்கு விரியும் தன்மையுடன் உள்ளது. உணவைக்கவர்வதற்கான சிறப்பு அம்சம் ஒன்றும் இதனிடத்தில் உண்டு. வாயின் அருகே குச்சி போன்ற பகுதி நீட்டிக்கொண்டிருக்கும். அதன் உச்சியில் சிறு தூண்டில் விளக்கு போல ஒளிரும் அமைப்பு இருக்கிறது. இது பிற பூச்சி மற்றும் மீன் இனங்களை கவர்ந்திழுக்கும். அருகே வரும் உயிரினங்களை அப்படியே லபக் என்று விழுங்கி வயிற்றை நிப்பிக்கொள்ளும் இந்த ஆங்லர் மீன்கள்.