துப்புத்துலக்கும் தலைமுடி


குற்ற வழக்குகளில் தலைமுடியை ஆராய்ச்சி செய்து துப்பு துலக்குவது உண்டு. அது எப்படித்தெரியுமா?
கைகளில் விதவிதமான ரேகைகள் காணப்படுவது போலவே
தலைமுடியிலும் சுருள் வரிகள் உண்டு. நுண்ணோக்கியில் வைத்துப்பார்த்தால் இவற்றைக்காணலாம். இந்த சுருள் வரிகளுக்கு இடையேயான இடைவெளி ஒவ்வொரு மனிதருக்கும் வேறுபடும். சந்தேகத்திற்குரிய நபரின் தலைமுடியையும் குற்றம் நடந்த இடத்தில் கிடைத்த தலைமுடியையும் ஒப்பிட்டு குற்றவாளியை கண்டுபிடித்துவிடலாம். வேதி பகுப்பாய்வு முறையில் தலைமுடிக்கு சொந்தக்காரரை அறியலாம். மேலும் சயனைடு, ஆர்சனிக் போன்ற விஷங்களை சாப்பிட்டு உயிர் இறப்பவர்களின் முடியில் அந்த விஷங்கள் தங்குவதுண்டு. அதை வைத்து இறந்தவர் விஷம் சாப்பிட்டாரா என்பதையும் கண்டுபிடிக்கலாம்.