பள்ளி/ கல்லூரி

பள்ளி சிறுவர்கள்
மாணவன் 1 . நம்ம டீச்சருக்கு வர வர ஞாபக மறதி அதிகமாயிடுச்சுன்னு நினைக்கிறேன்

மாணவன் 2.  எப்படிச் சொல்ற?
மாணவன் 1. பின்ன என்ன, அவங்களே போர்டில சிலப்பதிகாரம்னு எழுதிட்டு, நம்மகிட்ட சிலப்பதிகாரத்தை எழுதியது யார்னு கேள்வி கேட்கிறாங்க.


***********************************************************************
ஆசிரியர்:  நான் உனக்கு முதலில் இரண்டு கோழி தர்றேன். அடுத்து இரண்டு கோழி தர்றேன். இப்ப உன்கிட்ட மொத்தம் எத்தனை கோழி இருக்கும்
மாணவன்:  மொத்தம் 5 இருக்கும் சார்
ஆசிரியர்:  நல்லா கேளு.... முதல்ல இரண்டு கோழி தர்றேன். மறுபடியும் இரண்டு கோழி தர்றேன். இப்ப உன்கிட்ட மொத்தம் எத்தனை கோழி இருக்கும்?
மாணவன்:  5 தான் சார்
ஆசிரியர்:  (பெருமூச்சு விட்டவாறு) உஷ் முடியலடா சரி இப்ப இதுக்கு பதில் சொல்லு. முதல்ல இரண்டு ஆப்பிள் தர்றேன் அடுத்து இரண்டு ஆப்பிள் தர்றேன் மொத்தம் எத்தனை ஆப்பிள் இருக்கும்?
மாணவன்:  4 சார்
ஆசிரியர்:  தப்பிச்சேன்.. இப்ப கோழிக்கு வருவோம். 2 கோழி தர்றேன். பிறகு 2 கோழி தர்றேன். இப்ப உன்கிட்ட மொத்தம் எத்தனை கோழி இருக்கும்?
மாணவன்:  5 கோழி சார்
ஆசிரியர்: அடேய் எப்படிடா 5 கோழி வரும்?
மாணவன்:  என்கிட்டே ஏற்கனவே வீட்டில் ஒரு கோழி இருக்கு சார்.
ஆசிரியர்:  ??????