நகைச்சுவை
இரண்டு பிச்சைகாரர்கள் )
பிச்ச 1 :
நேத்து ராத்திரி முழுக்க
உன்னை காணாமே . . . எங்க
போயிருந்த ?
பிச்ச 2 : அதுவா . .
ராத்திரி நான் தாஜ்
ஹோட்டலில டின்னர்
சாப்பிட போயிருந்தேன். .
பிச்ச 1 : என்னது . . . . தாஜ்
ஹோட்டல்ல டின்னரா!
எப்புடி?
பிச்ச 2 :
நேத்து ஒரு புண்ணியவான்
50 ரூபாய் கொடுத்தாரு. .
நேரா ஹோட்டலுக்குப்
போனேன் . 1000
ரூபாய்க்கு சாப்பாடு ஆர்டர்
பண்ணினேன். சாப்பிட்டதும்
பில் வந்துச்சா. . எங்கிட்ட
பணம்
இல்லேன்னு சொன்னேன் .
உடனே போலீசுக்கு போன்
பண்ணி , போலீஸ்காரன்கிட்ட
என்னை ஒப்படைச்சான் .
ஹோட்டல விட்டு வெளிய
வந்ததும் 50 ரூபாய
அவன்கிட்ட கொடுத்தேன் .
என்ன விட்டுட்டான் .
எப்பூடீ ???
**********************************************************************************
சமூக நலன் மற்றும் சொந்த நலன் கருதி உண்ணாவிரதப்போராட்டம்னு சாந்தி அறிவிச்சிருக்காளே... ஏனாம்?
எடையைக் குறைக்கனும்னா சாப்பாட்டைக் குறைக்கனும்னு டாக்டர் ஸ்டிரிக்டா சொல்லிட்டாராம்... அதான்.
******
காஞ்சிபுரம் இட்லி செய்யப்போறேன்னு நம்ம ஆனந்தி ஒரு வாரமா சொல்லிக்கிட்டிருந்தாளே செஞ்சுட்டாளா?
இன்னும் ஜரிகை பார்டர் வைக்கணுமாம்.
காஞ்சிபுரம் இட்லி செய்யப்போறேன்னு நம்ம ஆனந்தி ஒரு வாரமா சொல்லிக்கிட்டிருந்தாளே செஞ்சுட்டாளா?
இன்னும் ஜரிகை பார்டர் வைக்கணுமாம்.
******
சாந்தி உங்க அண்ணன் பொண்ணு ஆறாம் வகுப்புல கிளாஸ் லீடரா வர்றதுக்கு மற்ற ஸ்டூடன்ஸை வோட்டுப்போடச்சொல்லி ஜாமென்ட்ரி பாக்ஸ், ஃபாரின் பேனாவெல்லாம் கொடுக்கச் சொன்னியாமே...
சாந்தி உங்க அண்ணன் பொண்ணு ஆறாம் வகுப்புல கிளாஸ் லீடரா வர்றதுக்கு மற்ற ஸ்டூடன்ஸை வோட்டுப்போடச்சொல்லி ஜாமென்ட்ரி பாக்ஸ், ஃபாரின் பேனாவெல்லாம் கொடுக்கச் சொன்னியாமே...
***********************************************
டி.டி.ஆர். சார் ஏ.சி கோச்ல டிக்கெட் கிடைக்கல.. அதனால நானே ஏர்-கூலர் ஏற்பாடு பண்ணிக்கிட்டேன்.. இது ஒண்ணும் தொந்தரவு இல்லையே?...
டி.டி.ஆர். சார் ஏ.சி கோச்ல டிக்கெட் கிடைக்கல.. அதனால நானே ஏர்-கூலர் ஏற்பாடு பண்ணிக்கிட்டேன்.. இது ஒண்ணும் தொந்தரவு இல்லையே?...
எக்ஸாம் இனி இப்படித்தான்
தேர்வு 1995 - எல்லா கேள்விகளுக்கும் விடையளிக்கவும்.
தேர்வு 2000 - ஏதேனும் ஐந்து கேள்விகளுக்கு மட்டும் விடையளிக்கவும்.
தேர்வு 2008 - ஏ அல்லது பி ஏதேனும் ஒரு கேள்விக்கு மட்டும் விடையளிக்கவும்.
தேர்வு 2015 - கேள்விகளை படிக்க மட்டும் செய்யவும்.
தேர்வு 2020 - தேர்வுக்கு வந்தமைக்கு நன்றி.
ஹய் ஜாலி
உடல் மண்ணுக்கு உயிர் சங்கத்துக்கு
தக்காளி ரசத்துல தக்காளி போடலாம், பாதரசத்துல பாதத்தை போடமுடியுமா?
இப்படிக்கு பிராக்டிகல் ரிசல்ட் வராமல் பைத்தியம் ஆனவர்கள் சங்கம் இல்லை இல்லை வார்டு....
*******************************************************************************
என்னது இது?... பாப்கார்ன், பஞ்சு மிட்டாய், ஐஸ்க்ரீம்காரங்கள்லாம் சாந்தி வீட்டுக்கு போறாங்க? சாந்தி "ஹோம் தியேட்டர்" கட்டியிருக்கிறது எல்லாருக்கும் தெரிய வேணாமா?...
*****************************************************************************
நம்ம ஆனந்தி சினிமா புரொட்யூசரை பார்க்கப் போறாளே..எதுக்காம்?
அவகிட்ட தினுசு தினுசா ஆயிரம் நகைங்க இருக்காம்..
அத வச்சு "ஆபரணம் ஆயிரம்"னு ஒரு படம் எடுக்கச் சொல்லிக் கேக்கறதுக்காம்.
*****************************************************************
ஆனந்தி பின்னாலயே அயர்ன் பாக்ஸும் கையுமா ஒரு அம்மா போறாங்களே ஏன்?
அதுவா அவ புடவை பார்டர் அப்பப்ப கசங்கினா உடனே அயர்ன் பண்ணி விடுறதுக்குத்தான்...
*****************************************************************
சொன்னா புரிஞ்சுக்குங்க மேடம்.. நீங்க முக்கியமான வாடிக்கையாளர்தான் அதுக்காக டி.வி.யில காட்டுற மாதிரி பெரிய "செக் புக்" எல்லாம் தரமுடியாது மேடம்...