கிச்சடி வகைகள்




*******************************************************************************
 
மசாலா கிச்சடி

 தேவையான பொருட்கள்

தோலுடன் உடைத்த பாசிப்பருப்பு  - ஒரு கப்
பாஸ்மதி அரிசி  - அரைகப்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
நன்கு பழுத்த தக்காளி  - 3
பச்சை மிளகாய் - 1
மிளகாய்தூள்  - ஒரு டீ ஸ்பூன்
பட்டை  - 1
நெய், எண்ணெய்  - தலா ஒரு டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு  - தேவையான அளவு


செய்முறை


பாசிப்பருப்பையும் அரிசியையும் ஒன்றாக சேர்த்துக் கழுவி 4 கப் தண்ணீர் விட்டு சிறிது உப்பு, மஞ்சள்தூள், ஒரு டீ ஸ்பூன் நெய் சேர்த்து குக்கரில் வேகவிடவும். 2 விசில் வந்ததும் தீயைக்குறைத்து 3 நிமிடம் கழித்து இறக்கி வைத்துக்கொள்ளவேண்டும். கடாயில் எண்ணெய் மற்றும் நெய்யை காயவைத்து பட்டை போட்டுத்தாளித்து பச்சைமிளகாயை கீறி அதனுடன் சேர்க்கவும். பிறகு பொடியாக நறுக்கிய தக்காளி, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து தக்காளி கரையும் வரை வதக்கி, வெந்த பருப்பு சாதத்துடன் சேர்க்கவும். நன்கு கலந்து கறிவேப்பிலையை கிள்ளிப்போட்டு பின்னர் சூடாக பரிமாறலாம். சுவையான மசாலா கிச்சடி மணமணக்கும் நாவிற்கும் மனதிற்கும்.  



   **************************************************************************
                                         அரிசி கிச்சடி
தேவையானவை


அரிசி=2 ஆழாக்கு
பச்சைப்பருப்பு= அரை ஆழாக்கு
பெரிய வெங்காயம்=2 நீளமாக நறுக்கியது
பூண்டு= 10 பல்லு
பச்சை மிளகாய் = 10 நீளமாக கீறியது
தேங்காய் துருவியது = அரை தேங்காய்
நெய் = அரை குழிகரண்டி
இலவங்கம் = 4
பட்டை = 2
ஏலக்காய் = 4
எண்ணெய் = ஒரு குழி கரண்டி
உப்பு தேவையான அளவு
 


செய்முறை
 

இதை குக்கரிலேயே செய்யலாம்.
முதலில் அரிசி மற்றும் பச்சை பருப்பை அரை மணிநேரம் ஊரவைக்கவும்.
அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் மற்றும் நெய் விட்டு பட்டை இலவங்கம் ஏலக்காய் போட்டு பொரிந்தவுடன் வெங்காயம் போடவும்.       


சிறிது வதங்கியவுடன் பச்சை மிளகாய் பூண்டு போட்டு வதக்கவும். அடுத்து தேங்காய் துருவலை போட்டு வதக்கவும். 

5 ஆழாக்கு தண்ணீர் சேர்த்து அதில் ஊரவைத்த அரிசி மற்றும் பாசிப்பருப்பு தேவையான அளவு உப்பு போட்டு வேகவைக்கவும்.

 இப்போது அருமையான அரிசி கிச்சடி தயார். இதை சூடாக மாங்காய் தொக்கு ஊறுகாயுடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
*****************************************************************************