கிராம நிர்வாக நடைமுறைகள்

1. நில உரிமையில் நிகழும் மாற்றங்களை உரிய பதிவேடுகளில் பதிந்து பராமரிப்பவர் யார்?
    கிராம நிர்வாக அலுவலர்
2. தமிழகத்தில் மொத்தம் எத்தனை கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் உள்ளன?
    12506
3. மக்களின் நேரடித் தொடர்பிற்குட்பட்ட இன்றியமையாத துறையாக இயங்குவது எது?
    வருவாய் நிர்வாகத்துறை
4. வருவாய் நிர்வாகத்துறை யாரின்கீழ் இயங்குகிறது?
    சிறப்பு ஆணையர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர்
5. பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணித்தல் போன்ற பணிகள் யாரால் கவனிக்கப்படுகின்றன?
    வருவாய் நிர்வாகத்துறை