ஒரு மனிதனின் உடம்பில் 600 க்கும் அதிகமான தசைகள் இருக்கின்றன. இது உடல் எடையிலர் 40 சதவீதமாகும்.
உலகில் மனிதர்களிடம் பொதுவாக காணப்படும் ரத்த குரூப் ஓ. அபூர்வமான ரத்த குரூப் ஏஹெச். இந்த ரத்த குரூப் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் உலகில் மொத்தம் 10 பேரிடம் மட்டுமே இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சிரிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. 6 வயது வரை குழந்தைகள் ஒரு நாளைக்கு 300 தடவைகள் சிரிக்கின்றன. 18 வயதைக்கடந்தவர்கள் ஒரு நாளைக்கு 100 தடவை மட்டுமே சிரிக்கிறார்கள்.
மனிதனின் நரம்புகளை ஒட்டு மொத்தமாக நீளமாக்கினால் அது 45 மைல் நீளமாக இருக்கும்.
மனிதனின் உடலில் ஒரு நிமிடத்திற்கு 300 கோடி அணுக்கள் செத்து மடிகின்றன.
மனித மூளையில் 85 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது.
ஒரு மனிதனின் தலையில் சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக்கும்.
ஒரு மனிதன் தனது வாழ்நாளில் 16 ஆயிரம் காலன் தண்ணீர் குடிக்கிறான்.
இருமலின் வேகம் மணிக்கு 100 கிலோமீட்டர்.
ஒரு சிசுவின் கையில் ரேகைகள் 3வது மாதத்திலிருந்து உருவாகின்றன.
ஒரு மனிதனுக்கு சரியாக தினமும் 40 முதல் 100 தலைமுடிகள் உதிர்ந்துவிடுகின்றன.
கம்ப்யூட்டரில் சில மணி நேரங்கள் பணிபுரிந்துவிட்டு பார்வையை சில நொடிகள் வெள்ளைநிற காகிதத்தில் செலுத்தினால் அந்தக்காகிதம் இளஞ்சிவப்பு நிறமாகத்தெரியும்.
ஆண்களின் உடல் பாகத்தில் மிகவும் வளரக்கூடிய முடி, தாடியில் வளரும் முடிதான். ஏனென்றால் ஒருவர் தனது வாழ்நாளில் தாடியை எடுக்காவிட்டால் அது 30 அடி நீளம் வரை வளர்ந்துவிடும்.
60 வயதாகும்போது நாக்கின் சுவை மொட்டுக்களின் பெரும்பகுதி அழிந்து போய்விடுகின்றன.
மனித தாடை 80 கிலோ எடையை இழுத்து அசைக்கக்கூடியதாகும்.
நன்றி. தினகரன் நாளிதழ்