இலங்கைப்பிரச்சினை பற்றி அண்ணா அன்று
ஒருமுறை தில்லி மாநிலங்களவையில் இலங்கைத்தமிழர் பிரச்சினை பற்றி அண்ணா அவர்கள் மிகவும் உருக்கமாகப் பேசிக்கொண்டிருந்தார். அப்போது வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த
கிருஷ்ணமேனன் குறுக்கிட்டு நீங்கள் ஏன் வேறு நாட்டு பிரச்சினையை இவ்வளவு அக்கறையுடன் பேசுகிறீர்கள்? இது பிறநாட்டு விவகாரத்தில் தலையிடுவதாக ஆகாதா? எனக்கேட்டார்.
அதற்கு அண்ணா அடுத்த வீட்டில் கணவன்-மனைவி நெருக்கமாக இருக்கும்போது எட்டிப்பார்ப்பது தவறுதான். ஆனால் அந்த மனைவியை கொடுமைக்கார கணவன் கழுத்தை நெரித்துக்கொல்ல முயலும்போது அவள் கத்துவதைக் கேட்டு ஓடி உதவுவது எப்படி தவறாகும்? அதிலும் அந்தப்பெண் எனக்குத் தங்கையாக இருக்கும்போது என்றார். இதைக்கேட்டதும் அமைச்சர் மெளனமாகிவிட்டார்.
ஆனால் இன்று.....